Tushar Bhattacharjee shared பொறியாளர். ஆன்டனி வளன்'sphoto.
பாஜக நடத்திய மோடி வித்தை!
நன்றி : அய்யா புதியவன்@ ஷாஜகான்
அய்யாவின் கட்டுரையோடு,என்னுடைய விமர்சனங்களும் சேர்த்தே!
பிரதமர் வேட்பாளர் என்றொரு அம்சம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதா என்று தி இந்து நாளிதழில் ஞாநி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். // பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது என்பதே இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும் விரோதமானதாகும். // என்கிறார் ஞாநி.
அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறமுடியாது. அப்படி எந்த விஷயமும் அரசியலமைப்பில் கூறப்படவில்லை என்பதுதான் சரி. மற்றபடி, அவர் குறிப்பிட்ட சிக்கல்கள் மற்றும் அவை தொடர்பான இதர வாதங்களுடன் நானும் உடன்படுகிறேன். இது ஒருபுறம் இருக்க, எதற்காக இந்த பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு என அலசுவதே இந்தப் பதிவின் நோக்கம்.
ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் முன்வைப்பதற்கான ஒரு கோஷம் தேவைப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அப்படியொரு கோஷம், மற்ற கட்சிகளிலிருந்து வித்தியாசமாக இருந்தாக வேண்டும், வாக்காளர்களையும் மக்களையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும். இது தேர்தல் பிரச்சாரத்தின் அடிப்படை. இந்த கோஷம் அரசியல், பொருளாதாரம் சார்ந்ததாக இருக்க வேண்டும். பாஜகவுக்கு இது மதம் சார்ந்ததாகவும் இருப்பது வழக்கம்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனிநபர்களை முதலமைச்சர்களாக முன்வைக்கும் போக்கு பல்லாண்டு காலமாகவே தொடர்வதுதான். மத்தியில் பார்த்தால், கரீபி ஹட்டாவ் (வறுமையை ஒழிப்போம்), இந்தியாவே இந்திரா – இந்திராவே இந்தியா போன்றவை இந்திரா காலத்தில் முன்வைக்கப்பட்ட கோஷங்கள்.
இதே போலத்தான் யுபிஏ-1 ஆட்சி அமைவதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி அரசு "இந்தியா ஒளிர்கிறது" (India Shining) என்றொரு கோஷத்தை முன்வைத்தது. இந்தக் கோஷத்திற்கு விளம்பர வடிவம் கொடுத்தவர் அப்போது பாஜகவில் இருந்த, அமரர் பிரமோத் மகாஜன். ஆனால் இந்தியா ஒளிர்கிறது கோஷம் மக்களிடம் எடுபடவில்லை, பாஜக ஆட்சியை இழந்தது.
வரவிருக்கும் தேர்தலுக்கும் கோஷங்கள் தேவைப்படுகின்றன. பாஜகவுக்கு அரசியல் சிக்கல் இருக்கிறது. பொருளாதார விஷயத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டு கட்சிகளுமே தனியார்மயத்தையும் உலகமயமாக்கலையும் ஆதரிப்பவை. அமெரிக்காவுக்கு அடிவருடுபவை. சுதேசி ஜாக்ரண் மஞ்ச் முன்வைக்கும் அந்நிய எதிர்ப்புக்கு பாஜகவுக்குள் ஆர்வம் இல்லை, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் அதில் உண்மையான ஆர்வம் இல்லை. சுதேசி என்ற கோஷம் வெறும் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது. உதாரணமாக, சேது சமுத்திரம் திட்டம்போல. சேது சமுத்திரம் திட்டத்திற்கு அஸ்திவாரம் போடும் பணியைச் செவ்வனே செய்த அதே பாஜகதான் பிற்பாடு சேதுசமுத்திரம் கூடாது என்று கூறியது. ஆக, பாஜகவிடம் மாற்றுப் பொருளாதாரக் கொள்கை என்று முன்வைப்பதற்கு எதுவும் இல்லை.
அரசியல்ரீதியாகப் பார்த்தால், பாஜகவின் முக்கிய ஆயுதம் மதம்தான். ராமர் ஜென்மபூமி, ராமர் கோவில் என்று பல காலமாக அரசியல் செய்துபார்த்துவிட்டது. அத்வானி நடத்திய ரத்த யாத்திரையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பாஜகவுக்கு இதனால் பெரிய அளவுக்கு அரசியல் லாபம் ஏதும் கிடைக்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்துவந்த ராமர் கோவில் என்ற கோஷத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் கிடையாது. இதேபோலத்தான் கஷ்மீர் பிரச்சினை, காசி மதுரா கோவில்கள் பிரச்சினை ஆகியவை எல்லாம் பாஜகவுக்குப் பிடித்தமான கோஷங்கள். அவற்றை முன்வைத்து நாடு முழுவதும் ஆதரவைப்பெற்றுவிட முடியாது என்பதை கடந்த கால நிகழ்வுகள் உணர்த்தியுள்ளன.
இந்நிலையில் என்ன கோஷத்தை முன்வைப்பது என்பதுதான் பாஜக முன் எழுந்த சவால். இந்திரா காங்கிரஸ் ஏற்கெனவே காட்டிய இந்திராவே இந்தியா என்ற தந்திரத்தைப்போல ஒன்றைக் கையில் எடுப்பதுதான் இப்போது அதற்கு உள்ள ஒரே வழி.
அப்படிப்பார்க்கையில் பாஜகவில் எந்தத் தலைவரும் தேசிய அளவில் மக்களை ஈர்க்கக்கூடியவராக இல்லை. மென்மதவாதத் தலைவர் வாஜ்பாயி முதுமையால் செயலிழந்துவிட்டார். அத்வானி ஓரம்கட்டுப்பட்டு விட்டார். ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்ற இதர தலைவர்களில் சுஷ்மா மட்டுமே மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர் – அதுவும் தில்லியில் மட்டுமே அவருக்கு செல்வாக்கு உண்டு. அருண் ஜெட்லி போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் சிறப்பாக வாதம் புரியக்கூடியவர்களாக இருக்கலாம், ஆனால் மேல்மட்டத்திலிருந்து வந்தவர்கள், மக்களோடு நேரடித்தொடர்பில் இல்லாதவர்கள். எனவே, மிஞ்சியிருப்பவர் மோடி மட்டுமே.
மோடியை முன்னிறுத்துவதற்கு அத்வானி எதிர்ப்புத் தெரிவிக்கிறார் என்றாலும், கடைசியில் அவர் அதை ஏற்றேதீர வேண்டும், அதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை. ஆர்எஸ்எஸ் உத்தரவுக்கு மேல் பாஜகவினர் சுயமாக முடிவேதும் செய்துவிட முடியாது. அதற்கான சங்கேதங்கள் நேற்றே தெரியத்தொடங்கி விட்டன.
ஏற்கெனவே மோடியையும் குஜராத்தையும் புகழும் வேலைகளை மோடியே ஆரம்பித்து விட்டார். அவ்வப்போது சர்ச்சைகளையும் கிளப்பி லைம்லைட்டில் இருக்கிறவாறு பார்த்துக்கொள்கிறார். உண்மையில் குஜராத் மற்ற எந்த மாநிலங்களையும்விட பெரிய முன்னேற்றம் கண்டுவிடவில்லை என்பதை மறைத்து, பொய்ப் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மோடி ஆதரவுக் கருத்தை உருவாக்குவதற்கும் கட்டமைப்பதற்கும் சமூக வலைதளங்களில் வேலை செய்வதற்காக 4000 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. இதில் வியப்படைய ஏதுமில்லை. குஜராத் மாடல் என்ற கோஷமும்கூட இப்படித்தான் உருவாக்கப்பட்டது.
ஆக, அரசியல் – பொருளாதார ரீதியான மாற்றுக்கொள்கைகள் முன்வைக்கப்பட முடியாதபோது நபரை முன்னிறுத்த முயலுகிறது பாஜக. பாசிஸ்டுகளின் கொள்கையும் இதுவே. காங்கிரஸ் ராகுலை முன்னிறுத்தக்கூடும் என்ற தொனியில் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் பேசியதுதான் பாஜகவுக்கு இந்த திடீர் முடிவுக்கு வழிவகுத்திருக்கிறது. நிச்சயமாக ராகுலைவிட மோடி பிரபலமாகவே இருப்பார் என்பது பாஜகவின் கணிப்பு.
இந்தியா ஒளிர்கிறது கோஷம் போல நமோ கோஷம் முன்வைக்கப்படலாம். நடுத்தரவர்க்கத்தினரையும் கருத்து உருவாக்கக் குழுக்களையும் கவர முனையலாம். அதற்கான சாத்தியங்கள் ஏற்கெனவே தெரியத்தொடங்கிவிட்டன. பாஜக-வையும் மதவாதத்தையும் எதிர்க்கிற நண்பர்கள் சிலரும்கூட மோடி வந்தால்தான் வரட்டுமே, அதில் என்ன தவறு என்று பதிவெழுதத் துவங்கியிருக்கிறார்கள். வரும் காலத்தில் இன்னும் இதுபோன்ற பதிவுகளை நிறைவே பார்க்கலாம்.
மற்றொரு பக்கத்தில், மற்ற கட்சிகள முந்திக்கொண்டு பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்து விட்டதை சாதகமாக பாஜக நினைக்கக்கூடும். ஆனால் இது உரிய நேரம்தானா என்பதும் கேள்விக்குறிதான். தேர்தலுக்கு 7-8 மாதங்கள் உள்ளநிலையில், இது அவசர முடிவாகவும் பாதகமாகவும் மாறக்கூடும்.
நமோ கோஷம் வெற்றி பெறுமா? அவ்வளவு சுலபமாக கணிக்கக்கூடிய விஷயம் இல்லை இது. இதுகுறித்தும் எழுத நிறைய இருக்கிறது. இருப்பினும் தெளிவான சித்திரம் கிடைப்பதற்கு இன்னும் சில மாதங்கள் கழிய வேண்டும்.
ஞாநி கட்டுரை வாசிக்க -
http://tamil.thehindu.com/opinion/columns/பிரதமர்-வேட்பாளர்-என்று-உண்டா/article5135919.ece
பொறியாளர் ஆன்டனி வளன் விமர்சனம்:
மிக நேர்த்தியான கட்டுரை சார்!
மோடியின் பித்தலாட்டங்கள் என்ற தலைப்பில் சில விடயங்களை எழுத வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் ஒட்டு மொத்தமாக வாட்டி வறுத்து எடுத்து இருக்கிறீர்கள். அருமை!
கடந்த சில மாதங்களாகவே,அமெரிக்காவில் ஒபாமா கூப்டாக, இங்கிலாந்தில் காமரூன் கூப்டாக என்று கலர் கலரா ரீல் விட்டார்கள் மோடி மஸ்தான்கள்.
ஒபாமேவே விரும்பி வந்து கூப்பிட்டதை போல படம் காட்டுவதற்காக,மோடி மஸ்தானை சந்திக்க,அமெரிக்கர்கள் சிலரை, ஒரு சில மாதங்களுக்கு முன்பு, தங்கள் சொந்த காசை செலவழித்து, குஜராத்துக்கு அழைத்து வந்தார்கள்.வந்த அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் பதினைந்தாயிரம் டாலர் செலவு செய்து, அவர்களை இங்கு அழைத்து வந்தவர்கள் அமெரிக்க வாழ் குஜராத்திகள் சிலர் என்பது பின்பு வெளியே வந்த அப்பட்டமான செய்தி!
அதன் பின்புலம் நரேந்திர மோடி!
அதாவது மோடியை கண்டு அமெரிக்காவே வியக்குது என்ற தொனியில் இவர்கள் காட்டிய படம்,வேலைக்கு ஆகாமல் படு தோல்வி மட்டுமாக அமைந்தது!
அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்புன்னு சில பத்திரிக்கைகள் கேள்வி கேட்டன!நாம வாங்குற அஞ்சு,பத்துக்கு இந்த வெளம்பரம் தேவையா:)
மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் அகப்பட்ட திருடனைப் போல, மோடி கோஷ்டி கண் விழி பிதுங்கி நின்று போன காட்சிகள் மறக்க முடியாதவை!
அடுத்து உத்தரகான்ட் வெள்ளத்தில் சிக்கிய, எட்டாயிரம் குஜராத்தியர்களை சக்திமானை போல,ஒரே நாளில் காப்பாற்றி,விமானத்தில் குஜராத்துக்கு கொண்டு போய் சேர்த்து விட்டார் மோடி என்று சில அயோக்கிய ஊடகங்கள் பறைசாற்றின.
முகநூலில் அப்படியா என்று வாய் பிளந்த கூட்டம், ஆம் மோடியால் மட்டுமே இது சாத்தியம் என்றதோடு மட்டும் நில்லாது, உத்தரகாண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் குஜராத்துக்கு விமானத்தில் சென்றவர்களின் எண்ணிக்கையை எல்லாம் கூட்டி கழிச்சு பார்த்து சரியாக ஏழாயிரத்து தொள்ளாயிரத்து பத்து என்று கணக்கு சொல்ல கிளம்பியது:) நல்லா வருவீங்க பாஸ்:)
சிந்தனையாளர்கள் பல கேள்வி கேட்டார்கள். கடும் மழையில் சிக்கிய அந்த மக்களை மீட்க இராணுவமே கடும் சிரமத்துக்குள்ளாக இருக்கின்றது. மூன்று நாட்களாக ராணுவம் கடுமையாக போராடி, மீட்டவர்களின் எண்ணிக்கையே இரண்டாயிரம் தான். எப்படி மோடி மஸ்தானால் மட்டும் எட்டாயிரம் பேரை ஒரே நாளில் காப்பாற்ற முடிந்தது?
நூறு ராணுவ அதிகாரிகளுக்கு பதிலாக, நாங்கள் ஒரே ஒரு மோடியை மட்டும் ராணுவத்தில் சேர்த்துக் கொள்கிறோம்,அவர் இந்தியாவை காப்பாற்றுவார்,சீனாவை மிரட்டுவார் என்று ராணுவ அமைச்சர் அந்தோணி கேட்ட போதும் கூட, அமைதி காத்தது மோசடி மோடி குழுமம்.!
சரியாக ஒரு வாரம் பல கேள்விக் கணைகள், எதிர் விமர்சனங்கள் எழுந்ததும், பதில் சொல்ல இயலாத மோடி மஸ்தான் மோசடி குழுவின் சார்பில், பாரதிய ஜனதாவின் ராஜ்நாத் சிங் பதில் சொன்னார், அதாவது அப்படிப்பட்ட தகவல் எதையும் நாங்கள் ஊடகங்களுக்கு சொல்லவேயில்லை. மோடி எட்டாயிரம் பேரை காப்பாற்றினார் என்று எவ்வித அதிகாரப் பூர்வமான தகவலையும் நாங்கள் தரவில்லை என்றார்கள்.
சரி அந்த இடைப்பட்ட ஒரு வார காலம் மோடி மஸ்தான் அந்த பொய்செய்தி எதையாவது மறுத்தாரா? அவர் எப்படி மறுப்பார்?
காரணம் இந்த கட்டு கதைகளின் நாயகனே மோடி மஸ்த்தான் தானே!
அதைப் போலவே சமீபத்தில் இது சிங்கப்பூர் அல்ல, ஜப்பான் அல்ல, லண்டன் அல்ல, இது தான் உங்கள் குஜராத் என்று, ஒரு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து விளம்பரம் ஒன்றை மோடி மஸ்தான் குழுமம் வெளியிட்டது..
உங்களில் பலர் பார்த்திருக்க கூடும்.
கடைசியில் பார்த்தால் ஆமாமா இது ஜப்பான்,லண்டன்,
சிங்கப்பூர்,குஜராத் எல்லாம் இல்லை. இது சீனா என்று தெளிவாக தெரிகிறது.
மோசடி செய்யும் கேடிப்பசங்க பேருந்து நிறுத்தத்தின் பெயர், சீன மொழியில் இருப்பதை கூட பார்க்காமல் விட்டது எப்படி என்று அக்கு வேறு ஆணி வேறாய் பிரிந்து மேய்ந்தார்கள் மோடியின் கேடித்தனத்தை அம்பலமாக்குபவர்கள்..ஆனாலும் மோடியின் மோசடி கூட்டம் அடங்கவில்லை!
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மோடி தான் வந்து பேச வேண்டும் என்று, இங்கிலாந்து ராணியே அழைப்பு விடுத்ததாகவும், காமரூன் ஒருபடி மேலே போய், மோடி பிரித்தானியா வந்தால் தான் நான் சாப்பிடுவேன் என்று உண்ணாவிரதம் இருந்ததாகவும் சில கதைகள் வந்தன.
ஒ இங்கிலாந்து ராணியே அழைப்பு விடுத்தார்,காம்ரூனே உண்ணாவிரதம் இருந்தார் என்ற கணக்கில் மோடி துதிபாடிகள் கதைகளை அளக்க, பிரித்தானிய பாராளுமனற்றதின் சார்பில் நாங்கள் எந்த மோடி கேடி மஸ்தானையும் அழைக்கவில்லை என்று செவுட்டில் அறைந்தாற் போர் பதில் சொன்னார்கள். அப்படியே அமைதியான மோசடி குழு!
மோடியை விருந்தினராக அழைப்பது எல்லாம் யாரென்று பார்த்தல், வெளிநாட்டில் வசதியாய் வாழும் ஒரு சில குஜராத் பெரும் பணக்காரர்கள் மட்டுமே!ஆனால் அதை மறைத்து அந்தந்த நாட்டின் பிரதமர்களும், அதிபர்களும் நேரடியாக அழைத்தது போலவே கேடி வேலை செய்கிறது மோடி கும்பல்!
இது எப்படி இருக்கிறது என்றால், ஆஸ்திரிய அரசாங்கம் கருணாநிதியின் சேவையை பாராட்டி தபால் தலை வெளியிட்டதை போல, சானல் நான்கின் காலம் மேக்ரே தபால்பதி சுடாளினுக்கு வாழ்த்து தெரிவித்ததைப் போல, போப் ஆண்டவர் கருணாதி பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லுவதை போல சொந்த காசிலேயே சூனியம் வைத்து மாட்டிக் கொள்வதை போல:)
ஆக முக்கால்வாசிக்கு மேல் மோசடித் தனங்கள்.இந்த வளர்ச்சி என்று சொல்லும் மின்சாரம், போக்குவரத்து, உலகவங்கி கணக்கு போன்றவற்றில் பல மோசடி தகவல்கள் இருக்கின்றன.
மோடி மஸ்தான் உலகின் மிகச் சிறந்த மாகாண முதல்வரா?
மோடி மஸ்தான் செயல்பாட்டளவில் மிக சாதாரண,சுமாரான முதல்வர் மட்டுமே!.மற்றபடி இவர்கள் சொல்லுவது போல உலகிலேயே, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக அளவுக்கு,ஒன்றும் பிரமாதமானவர் இல்லை என்பதே நிதர்சனம்!
முக்கால்வாசிக்கு மேல் மோசடித் தனங்கள்.இந்த வளர்ச்சி என்று சொல்லும் மின்சாரம், போக்குவரத்து, உலகவங்கி கணக்கு போன்றவற்றில் பல மோசடி தகவல்கள் இருக்கின்றன,இவை அனைத்தும் இணையங்களில் புள்ளி விவரங்களோடு இருக்கின்றன..ஆனால் அந்த உண்மை என்ற கசப்பு மருந்தை குடிக்க பலரும் தயாராக இல்லை.விரும்புவதும் இல்லை!
ஊடக விபச்சாரிகளின் ஊதிப் பெரிதாக்கும் வேலையினால்,
சன் தொலைக்காட்சி நிறுவன தயாரிப்பின் மொக்கை படங்களை கூட, அதீத விளம்பரம் மற்றும் பொய்யான விமர்சனம் போன்றவற்றின் மூலம், உலகத்தரமான படம் என்று இட்டு கட்டுவதைப் போல, மோடி மஸ்தானை இந்தியாவை காக்க வந்த கடவுள் என்பது போல பொய்யாக புகழ்ந்து தள்ளுகிறார்கள் என்பதே பட்டர்வர்தனமான உண்மை!
-ஆன்டனி வளன்

No comments:
Post a Comment